தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையுடன் போட்டிபோடும் ஏ.கே.ராஜனின் அறிக்கை... அண்ணாமலை விமர்சனம்...

ஏ.கே.ராஜன் ரிப்ரோட்டில் முரண்பாடுகள் இருப்பதாக பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையுடன் போட்டிபோடும் ஏ.கே.ராஜனின் அறிக்கை... அண்ணாமலை விமர்சனம்...

பாரதிய ஜன சங்கத்தின் நிறுவன தலைவர்களில் ஒருவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாவின்  106 வது பிறந்த தினத்தை முன்னிட்டு  தி.நகர் பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவ படத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் "இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்" எனும் பிரச்சார இணையதளத்தை துவங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர், 

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை, உதயநிதி ஸ்டாலின் தேர்தல்  பிரச்சாரத்தின் போது நகைகடன் தள்ளுபடி என  நகைகளை அடக்கு வைக்குமாறு கூறினார். ஆனால் சட்டசபையில் முறைகேடாக அடகு வைத்தால் நடவடிக்கை எடுப்போம் என்கிறார் முதல்வர்.  இது எப்படி சரியாக இருக்கும். முதலில் அவர் தனது சொந்த மகன் மீது நடவடிக்கை எடுப்பாரா என்றார். நிச்சயம் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினால் சந்தோஷப்படுவோம்.

ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை  வந்தவுடன் மம்தா, உத்தவ் தாக்ரே காங்கிரஸ் திமுக போன்றவர்களில்  கிச்சன் கேபினட் வெளியே வருகிறது. ஏ.கே.ராஜன் ரிப்ரோட்டில் பயங்கர முரண்பாடுகள்உள்ளது, திமுக தேர்தல் அறிக்கை விட ஏ.கே.ராஜ அறிக்கையை சிறப்பாக இருந்தது.

மக்களிடம் தவறான தகவல்களை தெரிவிக்க  திமுகவின் தேர்தல் அறிகையுடன் போட்டி போட்டுள்ளது ஏ.கே.ராஜன் அறிக்கை, ஏ.கே.ராஜன் ரிப்போட்டில் , நீட் சமூக நீதிக்கு எதிரானது என்ற கருத்தை வலுப்படுத்துவதாக தெரியவில்லை. 2.5 லட்சத்திற்கு கீழ்  சம்பாதித்தவர்கள் குழந்தைகள்  நீட் மூலம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளது அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருடம் 150 மாணவர்களோடு எய்ம்ஸ் திறக்க மத்திய அரசு அனுமதி கொடுத்தும்,  தமிழக அரசு திறக்க வேண்டாம் என முரண்டு பிடிக்கிறது , இது சமூக நீதிக்கு எதிரானது இல்லையா, இவர்கள் நடத்தும் தனார் கல்லூரிகளில் படிக்க வேண்டும்  என்பது தான் இவர்களின் எண்ணம் என்றார்.

நீட் வந்த பிறகு தான் பண முதலைகள் கட்டுபாட்டுக்குள வந்துள்ளனர். தமிழகத்தில் வியாபார சந்தையாக கல்வியை வைத்த்திருந்த மூன்று மாவட்டங்களை  நீட் உடைத்துள்ளதை  ஏ.கே.ராஜன் கமிட்டி ஏன்  பேசவில்லை, அரசுக்கு சாதகம் இல்லாத விஷயங்களை இந்த அறிக்கையில்  சேர்க்கவில்லை என்றார்.

2020ல் தமிழக மாணவர்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளியின் தரத்தை உயர்த்த தான் அரசு சிந்திக்க வேண்டும், அரசியல் செய்ய தேவையில்லாத விஷ பரீட்சையை கையில் எடுக்க கூடாது.

திமுகவின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதை விட அதிகமாக ஏ.கே.ராஜன் அறிக்கையில் கூறி உள்ளார், 99% நீட் பயிற்சி மையம் சென்று பயிற்சி  எடுத்துள்ளனர் என்று ஏ.கே.ராஜன் சொல்வதற்கு சான்று எங்கே? அரசு சொன்னதாக சொல்கிறார்? அந்த தரவுகள் எங்கே?

நீட் வந்தால் தமிழகத்தில்  மருத்துவக் கல்லூரி ஏழை மாணவர்கள் காணாமல் போய்விடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  அதை சொல்ல ஏ.கே.ராஜனுக்கு என்ன தகுதி உள்ளது என்றார். 2020 ல் எஸ்.டி சமுதாயத்தை சேர்ந்த மாணவி ஒருவர் நீட் மூலம் சேர்ந்துள்ளார். நீட் தேர்வால் தனியார் மருத்துவமனைகள் ஆதிக்கம் செய்துவந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைக்கு அனுமதி வழங்கியதின் மூலம் மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதி போல ஏ.கே.ராஜன் பேசுகிறார். ஒரு கமிட்டியின் தலைவர் போல தரவுகள் அடிப்படையில்  பேசவில்லை. எங்களது கூட்டணி சிறப்பாக உள்ளது,  திமுக கூட்டணி போல் சண்டையிட்டு தனியாக நிற்க மாட்டோம், திமுக புதிதாக ஆட்சிக்கு வந்த 4 மாதம் ஆகிறது honeymoon பிரியட்டில் உள்ளது. 4 மாதத்தில்  அவர்கள் செய்த தவறுகள் ஏராளம் பொய் ஏராளம், உள்ளாட்சி தேர்தலில் இதை மக்களிடம் எடுத்து செல்வோம். இதன் மூலம்கூட்டணிக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என நம்பிக்கை உள்ளது.
 
நிதியமைச்சரின் டிவிட்டர் பதிவு குறித்த கேள்விக்கு, பொது அறிவு மனிதனுக்கு மிக முக்கியம். நிதியமைச்சர் சாதரண மனிதனை திட்டுவது. தமிழ்நாட்டில் உள்ள ஒரே அறிவாளி பொருளாதார புலி தான் மட்டுமே என்று எண்ணி கொள்கிறார். நிதியமைச்சர் நிதி சுமையை சீர்படுத்த வேண்டும். மூன்று கருத்துக்களை அவர் கூறி வருகிறார். நோக்கம் சரியில்லை என்றும் கூறி உள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com