யானை தாக்கி பாகன் உயிரிழப்பு...!!

யானை தாக்கி பாகன் உயிரிழப்பு...!!

முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள மசினி யானை தாக்கியதில் அதன் பாகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் இன்று காலை வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கிய போது பாலன் என்ற பாகனை மசினி என்ற வளர்ப்பு யானை தாக்கியதாக கூறப்படுகிறது,

இந்நிலையில் பாலனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது அவரை சோதித்த மருத்துவர்கள் பாலன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து பாலனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதுமலை வனத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரி்விக்ப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முன்னதாக, கடந்த 2018 ஆம் ஆண்டு சமயபுரம் கோவிலில் இதே மசினி யானை தனது பாகனை தாக்கிக் கொன்றது. இதனைத் தொடர்ந்து அந்த யானையை முதுமலைக்கு அழைத்து வந்து அதனை பாலன் என்ற யானை பாகன் பராமரித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை தனது பாகனை இந்த யானை தாக்கிக் கொன்றதால் கும்கி யானைகள் உதவியுடன் இந்த யானையை பிடித்து தனிமையில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com