மக்களிடம் பிரிவினை ஏற்படுத்தும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை- சொல்வது அண்ணாமலை!  

தமிழகத்தில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் அது தமிழகத்திற்கு நலன் தரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மக்களிடம் பிரிவினை ஏற்படுத்தும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை- சொல்வது அண்ணாமலை!   

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல.கணேசனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அது தொடர செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, இல.கணேசன் தன்னை போன்ற அரசியல்வாதிகளுக்கு செதுக்க கூடியவர் என்று பெருமை சூட்டினார்.

தமிழகத்தில் 1961 பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 41ல் இருந்து 39 ஆக குறைக்கப்பட்டது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்திருக்கிறது, அதில் பாஜக நிலை குறித்த கேள்விக்கு.நாடாளுமன்றத்தின் மக்களவையில் அதிக உறுப்பினர்கள் இருப்பது, தமிழகத்திற்கு நல்லது என்றும் உரிய விளக்கத்தை பாஜக நீதிமன்றத்தில் தெரிவிக்கும் என்றுஅதிகப்படியான நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தால் மக்கள் எளிதில் அவர்களை அணுகி பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சமமாக வளர்ச்சியைக் கொண்டு செல்ல மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும், இதுதான் பாஜகவின் நிலைப்பாடு பிரிவினை ஏற்படுத்தப்படும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை அண்ணாமலை என்று குறிப்பிட்டார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com