தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

தமிழகத்தில் இன்று முதல் நாளை மறுநாள் வரை பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம்:

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,  தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 8ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதேபோன்று, வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் எனவும், சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மீனவர்கள் இந்த நாட்களில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com