டெல்டா மாவட்டங்களில் வரும் 27, 28 தேதிகளில்...சென்னை வானிலை மையம் தகவல்!

டெல்டா மாவட்டங்களில் வரும் 27, 28 தேதிகளில்...சென்னை வானிலை மையம் தகவல்!

தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 26 ஆம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதேபோல், வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தென் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. 

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்  ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com