காங்கிரஸ் கட்சி எதையும் மாற்ற முடியாது- கரு.நாகராஜன் விமர்சனம்!

Zoom மீட்டிங்கில் பேசி விடுவதால் காங்கிரஸ் கட்சி எதையும் மாற்றி விட முடியாது என தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி எதையும் மாற்ற முடியாது- கரு.நாகராஜன் விமர்சனம்!

மறைந்த மாவீரன் ஒண்டிவீரனின் 250 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கருநாகராஜன் தலைமையில், ஒண்டி வீரன் உருவப்படப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக மட்டும் தான் அனைத்து தலைவர்களுக்கும் மரியாதை செலுத்தி வருவதாகவும், நெல்லையில் ஒண்டிவீரனுக்கு நினைவு மண்டபம் இருப்பது போல சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,  இந்தியாவில் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விட்டது. எனவே Zoom மீட்டிங்கில் பேசி விடுவதால் மட்டும் காங்கிரஸ் கட்சியால் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது என்றும், கூட்டத்தொடரில் பேசாமல் இப்போது பேசி என்ன பயன் என்று கேள்வி எழுப்பினார். அதேபோல் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பாராளுமன்றத்தில் பேசாமல், பொதுமக்கள் வரிப்பணத்தை எதிர்க்கட்சிகள் வீணடித்து விட்டதாகவும் அவர் கூறினார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com