திமுக அரசு விளம்பரம் அரசியல் செய்யும் - சட்ட ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது - இபிஎஸ் டுவீட்

திமுக அரசு விளம்பரம் அரசியல் செய்யும் - சட்ட ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது - இபிஎஸ் டுவீட்

எதிர்கட்சி தலைவர் விமர்சனம்

 எதிர்கட்சி தலைவர் மற்றும் அதிமுக கட்சியின் இடைகால பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். அந்த பதிவில் திருச்சியில் நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணை தாக்கி நடுரோட்டில் தரதரவென இழுத்து சென்று பட்டபகலில் வழிப்பறி செய்திருப்பது நெஞ்சை பதற வைக்கிறது. யார்க்கும் எதற்கும் அஞ்சோம் எனும் மனநிலையில் தமிழகத்தில் அட்டூழியம் அதிகரித்துள்ளது.

ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னர் பிடிச்ல் வாசித்தது போல் தமிழ்நாட்டில் எது நடந்தாலும் சட்டம் ஒழுங்கு அடியோடு அழிந்து போனாலும் விளம்பர அரசியல் செய்யும் விடியா அரசைன் முதல்வரின் காதுகளுக்கு மட்டும் அது எட்டுவதே இல்லை என்பது வேதனைக்குரியது என பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com