”மக்களை ஏமாற்றுவதே திமுகவின் செயல்பாடு” - டிடிவி

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக திமுக ஆட்சி உள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். 

தூத்துக்குடியில் நடைபெற்ற அமமுக கட்சியின் மாநில மகளிர் அணி துணை செயலாளரின் மகன் திருமணத்தில் அக்கட்சியின் நிறுவன தலைவர் டிடிவி தினகரன் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக திமுக ஆட்சி உள்ளதாக கூறியவர், மக்களை ஏமாற்றுவது தான் இந்த திமுக ஆட்சியின் செயல்பாடாக இருக்கிறது என்று கூறினார்.

அதிமுகவிடன்  கூட்டணி தொடருமா? என்ற கேள்விக்கு அதிமுகவுடன் இனி கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com