தாயை மிஞ்சிய சக்தி இந்த உலகத்துல எதுவுமே இல்ல...

தாய்மையே சிறந்தது என மனிதர்கள் மட்டுமின்றி மிருகங்களும் நிரூபத்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம் காஞ்சிபுரத்தில் அரங்கேறியுள்ளது.

தாயை மிஞ்சிய சக்தி இந்த உலகத்துல எதுவுமே இல்ல...

தாய் பாசம் என்பது மிகவும் பெரிய ஒன்று. என்னதான் நாம் எவ்வளவு பெரியவர்களானாலும், நம் தாய் பாசம் என்று வந்தாலே, நாம் ஒரு குழந்தையாகவே மாறி விடுவோம்.. அந்த தாயானவள் வெறும் கருவில் சுமப்பது மட்டுமல்ல, மனதாலும் சுமந்து பாதுகாப்பாள்.

ஆனால், இந்த தாய் பாசம் மனிதர்களுக்கு மட்டுமா என்ன? அப்படி கேட்டால் அது உண்மை இல்லை, ஏன் என்றால், அனைத்து வகையான உயிர்களுக்குமே உச்சபச்ச பாசம் தரக்கூடிய ஒரு ஜீவன்ன்ன அது தாய் தான். அதிலும், நன்றியுள்ள நாய்களுக்கு பாசம் என்றால் என்னவென்று எல்லாருக்கும் தெரியும்...

மேலும் படிக்க | மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்!

மனிதனாக இருந்தால் என்ன, மிருகமாக இருந்தால் என்ன, தாய் பாசம் ஒன்று தான் என்பதை நிரூபிக்கும் வகையில், காஞ்சிபுரத்தி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகில் தனி நபருக்கு சொந்தமான ஒரு இடத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

மேலும் படிக்க | கோவை கார்குண்டு வெடிப்பு..முக்கிய தகவலை வெளியிட்ட என்ஐஏ!!!

இதன் அருகில் ஒரு பெண் நாய், இரண்டு நாட்களுக்கு முன் மூன்று குட்டிகளை பெற்று பாதுகாத்து வந்தது. பொதுவாக நாய்கள், குட்டிகளை மற்ற விலங்குகளிடம் இருந்து காக்க பள்ளத்தில் தான் பாதுகாக்கும். அது போல தான் இந்த பெண் நாயும், தனது அழகான மூன்று குட்டிகளை, கட்டுமான பணிகள் நடக்கும் இடத்தில் இருக்கும் கால்வாய் அருகில் வைத்து வளர்த்து வந்தது.

திடீரென்று இன்று, எதிர்பாராத விதமாக, சுமார் ஒரு மணி நேரமாக, வல்லக்கோட்டையே அதிரும் அளவிற்கு கனமழை பெய்ததில், அந்த கழிவுநீர் கால்வாய் நிரம்பி வழிந்தது. அந்த கால்வாயில், மூன்று குட்டிகளும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு, அந்த கால்வாய் உள்ளே தவறி விழுந்துள்ளது.

மேலும் படிக்க | அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு...காவல்துறையுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளால் பரபரப்பு!

பதறி போன அம்மா நாய், தனது குட்டிகளை காப்பாற்ற அங்கும் இங்குமாக, குறுக்க மறுக்க ஓடி தவித்துள்ளது. அந்த வழியாக சென்ற பொது மக்களுக்கு அந்த அம்மா நாயின் தவிப்பு புரியவில்லை போலும். ஆனால், அங்கு கட்டுமான பணிகள் செய்யும் இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த சித்தாள் ஒருவர், அந்த நாயை பல நாட்களாக கவனித்ததில், அந்த நாய்க்கு ஏதோ பிரச்சனை என புரிந்து உதவ முன்வந்துள்ளார்.

கால்வாயையே சுற்றி சுற்றி வந்த அம்மா நாய் தனியாக இருப்பதை பார்த்து, அதன் குட்டிகள் விழுந்தது அவருக்கு புரிந்து, கழிவுநீர் கால்வாயில் கையை விட்டு, மூன்று குட்டிகளையும் மீட்டுள்ளார். ஆனால், அந்த குட்டிகள், சற்றே பிறந்ததால், தண்ணீரில் மூழ்கி, மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்துள்ளது. அந்த குட்டிகள் இறந்தே போனது என பயப்படாமல், அந்த அம்மா நாய், தனது நாக்கால் குட்டிகளை சுத்தம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக சூடேற்றி உள்ளது.

மேலும் படிக்க | பத்திரிக்கையாளர்களுடன் காயத்ரி ரகுராம் வாக்குவாதம்...பாதியில் முடிந்த செய்தியாளர்கள் சந்திப்பு!

நீண்ட நேரம் ஆனாலும், நிறுத்தாமல், மனம் தளராமல், கொஞ்சம் கொஞ்சமாக அந்த மூன்று குட்டிகளையும் உயிர் பிழைக்க வைத்துள்ளது அந்த அம்மா நாய். இந்த நெகிழ்வான சம்பவத்தை கட்டிட பணிகள் செய்யும் ஊழியர்களும், அந்த பகுதி மக்களும் மனமுருக பார்த்து ரசித்தனர் என்று தான் சொல்ல வேண்டும்.

அது மட்டுமில்லாமல், அந்த அம்மா நாய்க்கு தன்னோட குட்டிகளை காப்பாற்றிக் கொடுத்த கட்டிட தொழிலாளிக்கும், எல்லோரும் பாராட்டுகளை தெரிவித்தனர். வாயில்லா ஜீவனின் குட்டிகளைக் காப்பாற்றி தாய்மை என்பது மனிதருக்கும் மிருகங்களுக்கும் ஒன்று தான் என புரிய வைத்த இந்த சம்பவம் வல்லக்கோட்டை பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | 116 கோடி ரூபாய்க்கு இனிப்புகள் விற்பனை... ஆவின் நிறுவனத்தின் தீபாவளி கொண்டாட்டம்...


2024 ஆம் ஆண்டிற்கான  ரோட்டரி மெட்ராஸ் சவுத் வெஸ்ட் "Chariot Awards" விழாவில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் ததார் பங்கேற்று விருதுகள் வழங்கினார்

ஒவ்வோராண்டும் ரோட்டரி மெட்ராஸ் சவுத் வெஸ்ட்,  வாழ்நாள் தொழிற்துறை சாதனையாளர்,  கௌரவம், கலை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில்  "Chariot Awards" வழங்கி சிறப்பித்தது வருகிறது. 

சென்னை எழும்பூரில் உள்ள ரேடிசன் ப்ளூ நட்சத்திர விடுதியில் நடைபெற்ற விருது விழாவில், இந்த ஆண்டிற்கான 5 விருதுகள் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் ததார் முன்னிலையில்  வழங்கப்பட்டன.

அந்த வகையில் மெட்ராஸ் டிஸ்லெக்சியா சங்கத்தின் தலைவர் டி.சந்திரசேகருக்கு கௌரவத்திற்கான  Chariot Award வழங்கப்பட்டது.  

வொகேஷனல் எக்ஸலன்ஸ் விருது விஜய் கார்மென்ட்ஸின் நிர்வாக இயக்குநர், ரொட்டேரியன் டி.விஜயகோபால் ரெட்டிக்கும்,   வாழ்நாள் தொழிற்துறை சாதனையாளர் விருது சங்கர நேத்ராலயா போர்டு ஆஃப் கவர்னர் மருத்துவர்.  லிங்கம் கோபாலுக்கும் வழங்கப்பட்டது. 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஏஸ் ஸ்கேட்டிங்கில் தங்கம் வென்ற 
 அவிக்ஷித் விஜய் விஸ்வநாத்திற்கு விளையாட்டிற்கான  விருதும்,  கர்நாடக பாடகி,  ஸ்ரீவித்யா வாசுதேவனுக்கு கலைக்கான  "Chariot Awards" வழங்கப்பட்டன. 

விருது பெற்ற ஒவ்வொருவரும்  தங்கள் எண்ணங்களையும், வாழ்நாள் பயணத்தையும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்

இந்த  "Chariot Awards" நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினர்களாக ரொட்டேரியன் சுரேஷ் ஜெயின், கங்காதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ரொட்டேரியன்கள் மஞ்சு குல்கர்னி, மகேஸ்வரன், ஹரிஷ் மகாதேவன், குல்தீப் சேத்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விருது பெற்றபின் பேட்டியளித்த ஏஸ் ஸ்கேட்டிங் வீரர், அவிக்ஷித் விஜய், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற போது சீனாவில் இந்திய தேசிய கீதம் ஒலித்தது தன் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு என்றார். தற்போது தமிழ்நாட்டில் ஸ்கேட்டிங் போட்டிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதாகவும் அதனை இன்னும் மேம்படுத்தி தர வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்த அவர், இந்த சின்ன வயதில் ரோட்டரி மெட்ராஸ் சௌத் வெஸ்ட் சேரியட் விருது பெற்றதற்கு தான் கடன்பட்டுள்ளதாகவும் நெகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்

வேளச்சேரியில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பள்ளத்தில் விழுந்த ஜெயசீலனின் உடலை உறவினர்கள் வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை வேளச்சேரியில் கட்டுமான நிறுவனம் தோன்றிய ராட்சத பள்ளம், மிக்ஜாம் புயலால் சரிந்து விழுந்தது. இதில் சிக்கிக்கொண்ட இரண்டு நபர்களை நான்கு நாட்களுக்கு பின்பு நேற்றைய தினம் மீட்டனர். அதில் நரேஷ் என்பவரின் உடல் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிக்க : தனிநீதிபதி கருத்துக்கு எதிராக அமைச்சர் சேகர்பாபு புகார் மனு!

அதேபோல், நேற்று மதியம் ஜெயசீலன் என்பவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜெயசீலனின் உறவினர்கள் கையொப்பமிட்டால் மட்டுமே பிரேத பரிசோதனை நடைபெறும். ஆனால், உயிரிழந்த ஜெயசீலனின் உடலை வாங்குவதற்கு உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், குறிப்பாக  உரிமையாளர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

சனாதன தர்மம் எதிர்ப்பு மாநாடு குறித்து நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தெரிவித்த கருத்துகளை நீக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் விசாரித்தார். அப்போது, சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். 

இதையும் படிக்க : கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

இந்த நிலையில், சனாதன தர்மம் எதிர்ப்பு மாநாடு குறித்து தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் சேகர் பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், உச்சநீதிமன்ற வழிமுறைகளை தனிநீதிபதி பின்பற்றப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் களமிறங்கினால் மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகளில் அண்ணாமலை ஆய்வு மேற்கொண்டார். 

இதையும் படிக்க : வெள்ளம் வடிந்த நிலையில், முழுவீச்சில் நடைபெறும் சீரமைப்பு பணிகள்!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தார். பல கோடி ரூபாய் இழப்பை எதிர்கொண்டுள்ள தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு, சென்னை வருகை தரும் மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறினார்.

அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு நாள் ஊதியம் என்பது புயல் நிவாரண நிதியில் ஒரு துளி மட்டுமே என்றுக்கூறிய அண்ணாமலை, அவர்கள் களத்தில் இறங்கி வந்தால் தான் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், கூலி வேலை செய்பவர்கள் கூட களத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தங்களை இணைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். 

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் வடிந்த நிலையில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஒருசில இடங்களில் மின்சாரம் வழங்க கோரி பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

பெரும்பாக்கம் சேகரன் நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கழுத்தளவு தண்ணீரில் சிக்கி கொண்டவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது கழுத்தளவு தண்ணீரில் குழந்தையை முதல்நிலை காவலர் நாகராஜ் தோளில் சுமந்தவாறு பத்திரமாக மீட்டார். 

கொரட்டூர் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் வெள்ள நீர் வடிந்த நிலையில் 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் மின்னல் வேகத்தில் சுத்தம் செய்தனர். கொரட்டூர் காவல் நிலையம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் காவலர்கள் சாலையில் அமர்ந்து வேலை செய்யும் நிலைக்கு ஆளானதாக செய்தி வெளியிட்ட நிலையில், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் வந்து ஆய்வு செய்து மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.

இதையும் படிக்க : மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று சென்னை வருகை...!

கொருக்குப்பேட்டை பரமேஸ்வரன் நகர் பகுதியில் தொடர்ந்து நான்காவது நாட்களாக மின்சாரம் இல்லாததால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சமரசம் எட்டப்படாததால் பொதுமக்களும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே உள்ள பெரியார் நகர்,  திருவேணிதெரு, கங்காதெரு, யமுனாதெரு உள்ளிட்ட பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பரிசலில் பயணிக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.  மேலும் அப்பகுதியில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து துர்நாற்றம் வீசுவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.