என்எல்சி விவகாரத்தில் அதிகாரிகள் பேச்சைமட்டும் கேட்காமல் விவசாயிகள் பேச்சையும் கேளுங்கள்..!” - த.வா. க தலைவர் வேல்முருகன்.

என்எல்சி விவகாரத்தில் அதிகாரிகள் பேச்சைமட்டும் கேட்காமல் விவசாயிகள் பேச்சையும் கேளுங்கள்..!” - த.வா. க  தலைவர் வேல்முருகன்.

முதலமைச்சர் அதிகாரிகள் சொல்வதை மட்டும் கேட்காமல் விவசாயிகள் சொல்வதையும் கேட்டு செயல்பட வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில்  
’பூவுலகின் நண்பர்கள்’ தயாரித்துள்ள கடலூர் மாவட்டம் நெய்வேலியில்
என்.எல்.சி. நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் அனல் மின் நிலையம் மற்றும் சுரங்கச் செயல்பாடுகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து ‘மின்சாரத்தின் இருண்ட முகம்’ எனும் ஆய்வறிக்கையை வெளியிட்டனர்.

இந்நிகழ்சியில்  தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா,  பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், மந்தன் அத்யாயன் கேந்திரா, ஸ்ரீபத் தர்மாதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என். எல். சி. நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் அனல்மின் நிலைய மற்றும் சுரங்கச் செயல்பாடுகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து ஆய்வறிக்கை வெளியீட்டின்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

” கடலூர் மாவட்டம் பெரும் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டம் மட்டும் இல்லாமல் பக்கத்தில் உள்ள மாவட்டங்களுக்கும் அது காற்றின் மூலம் பரவுகிறது. நெய்வேலி சுற்றியுள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

மேலும், 250 சதவீதத்திற்கு மேலாக பாதரசம் கலக்கப்படுகிறது. மக்களுக்கு மாசுபடாத காற்று கிடைக்க வேண்டும். என்எல்சி நிறுவனத்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

2001 முதல் 2011 வரை பலமுறை சட்டமன்றத்தில் பேசி உள்ளேன். ஆனால் இதுவரை மத்திய அரசாலோ மாநில அரசாலோ எந்த ஒரு பயனும் கிடைக்கவில்லை.

தமிழ்நாடு முழுவதும் இயற்கைக்கு நேர் மாறான ஒரு நிலையில் தான் உள்ளது. நீதிமன்றமும் விவசாயிகளில் யாரும் போராட்டம் செய்யக்கூடாது என்றும்  மீறி போராட்டம் செய்தால் காவல்துறையுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகிறது.  செப்டம்பர் மாதத்திற்குள் அறுவடை முடித்துவிட்டு காலி செய்ய வேண்டும் என கூறுகிறது,. ஒரு நீதிபதி பயிரை அழிப்பதைக் கண்டு கண்ணீர் வடித்ததாக கூறினார். மற்றொரு நீதிபதி இடத்தை காலி செய்யுங்கள் என்று கூறுகிறார்.

என்.எல்.சி -யால் பல பிரச்சினைகள் இருந்து வரும் நிலையில்  இந்தியாவின் மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தமிழ்நாட்டின் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அமைதியாக  இருக்கிறது. 

இது போன்ற மக்களின் பிரச்சினைகளில் மாண்புமிகு முதலமைச்சர் உங்களிடம் இருக்கும் அதிகாரி சொல்வதை மட்டும் கேட்காமல், களத்தில் இருக்கும் விவசாயி சொல்வதை கேட்டு அதனை நிறைவேற்ற வேண்டும் என  கேட்டுக்கொள்கிறேன்”,  என்று கூறினார். 

மேலும், என்எல்சி எதிராக கூட்டணியில் இருந்து விலகி இருக்கலாம்,   அல்லது சட்டமன்ற உறுப்பினர் பதவி ராஜினாமா செய்வீர்களா?  செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு?

” கோரிக்கைகள் அனைத்து நிறைவேற்றப்படும் என்றால் எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயார்..! “ என்று உறுதியளித்தார். 

அவரைத்தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா  பேசுகையில்:- 

” பல தொழிற்சாலைகளுக்கும் மாசு கட்டுப்பட்ட வாரியம் அபராதம் விதிக்கிறது;  ஆலை இழுத்து மூடுகிறது. ஆனால் என்.எல்.சி. மட்டும் விதிவிலக்காக தான் உள்ளது. என்எல்சிக்கு அபராதம் விதிப்பது மட்டுமில்லாமல், அதன் பிற செயல்களை முடக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கோரிக்கை வைக்கிறேன்”, என்றார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com