“தேர்தலை நிறுத்தி வைக்க முடியாது....” இபிஎஸ் நீதிமன்றத்தில் பதில்!!

“தேர்தலை நிறுத்தி வைக்க முடியாது....” இபிஎஸ் நீதிமன்றத்தில் பதில்!!

அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் வழக்குகளை வரும் 22-ம் தேதி விசாரித்து, 24-ம் தீர்ப்பு வழங்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு தெரிவித்துள்ளார். 

வழக்கும் விசாரணையும்:

அதிமுக பொதுச்செயலளாருக்கான தேர்தல் வரும் 26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில் இபிஎஸ் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்த நிலையில், இந்த தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பிலிருந்து வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியே மனுதாக்கல் செய்திருந்தனர்.  

இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் சுமார் 2 மணிநேரம் தங்களது வாதங்களை முன்வைத்தனர். 

நிலுவை வழக்கு:

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு நிலுவையில் உள்ள போது தற்போது பொதுச்செயலாளர் தேர்தலுக்கு என்ன அவசரம் எனக் கேள்வி எழுப்பினார். 

முடிவுகள்:

தொடர்ந்து தேர்தலை நிறுத்தி வைக்க முடியுமா என நீதிபதி எழுப்பிய கேள்விக்கு இபிஎஸ் தரப்பு மறுப்பு தெரிவித்ததால், தேர்தலை நிறுத்த விரும்பவில்லை, தேர்தல் நடைமுறைகளை தொடரலாம் எனவும், ஆனால் முடிவுகளை அறிவிக்க வேண்டாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். 

ஒத்திவைப்பு:

அத்தோடு அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்குகளின் விசாரணையை வரும் 22-ம் தேதி தொடங்கி  24-ம் தேதி தீர்ப்பை வழங்குவேன் என்றும் நீதிபதி குமரேஷ் பாபு குறிப்பிட்டார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com