பலத்த மழை காரணமாக 24 மணி நேர அவசர எண் அறிவிப்பு!

பலத்த மழை காரணமாக 24 மணி நேர அவசர எண் அறிவிப்பு!

தொடர் மழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் 24 மணி நேர அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாகவும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

 மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

ஒருசில பகுதிகளில் பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்தும் சேதமடைந்தும் உள்ளன. பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறி உள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணிகளுக்காக மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது.

கட்டுப்பாட்டு அறை - அலுவலர்கள் தொலைபேசி எண்கள், நகராட்சி ஆணையாளர் - 7397392722 உதவிப் பொறியாளர் - 9791755850, துப்புரவு ஆய்வாளர் -9943640641 ஆகிய எண்களில் வெள்ள பாதிப்பு புகார்களை தெரிவித்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைவாகச் சென்று பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள நகராட்சிப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.