அதிமுகவில் இருப்பதற்கு இபிஎஸ்க்கு தகுதி இல்லை...ஓபிஎஸ் ஆதரவாளர் குற்றச்சாட்டு...!

அதிமுகவில் இருப்பதற்கு இபிஎஸ்க்கு தகுதி இல்லை...ஓபிஎஸ் ஆதரவாளர் குற்றச்சாட்டு...!

அதிமுகவில் இருப்பதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை என்று  ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை:

தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம், இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய ஆவணங்களின்படி தமிழக தேர்தல் ஆணையம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பி உள்ளது.

ஆனால், அந்த கடிதத்தை ஈபிஎஸ் அணியினர் திருப்பி அனுப்பியுள்ளனர். ஈபிஎஸ் கடிதத்தை திருப்பி அனுப்பினால் அவர்கள் அதிமுகவை விட்டுவிட்டு தனிக்கட்சி தொடங்கலாம், அதிமுகவில் இருப்பதற்கு அவர்களுக்கு தகுதி இல்லை என வைத்திலிங்கம் குற்றம் சாட்டினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com