தமிழக தேர்தல் அதிகாரியுடன் இந்திய தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை...!

தமிழக தேர்தல் அதிகாரியுடன் இந்திய தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை...!

தமிழ்நாடு தேர்தல் அதிகாரியுடன் இந்திய தேர்தல் ஆணைய  அதிகாரிகள் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினா்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பாதூ, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு மற்றும் ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டுகள், வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com