முதல்வரின் அறிவிப்பை அதிகாரிகளும் கேட்பதில்லை, மக்களும் கேட்பதில்லை.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.!

முதல்வரின் அறிவிப்பை அதிகாரிகளும் கேட்பதில்லை, மக்களும் கேட்பதில்லை.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.!

திமுக ஆட்சியில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது தொற்று பரவலை கட்டுப்படுத்த அடிப்படை வேலையை கூட திமுக மேற்கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டினார்

மறைந்த காயிதே மில்லத் 126வது பிறந்தநாளையொட்டி திருவல்லிக்கேணி பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறும்போது சரியான திட்டமிடலுடன் தொற்றுப் பரவலை அதிமுக கட்டுப்படுத்தியது எனவும் திமுக தொற்று பரவலை அடிப்படை வேலைகளை கூட செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.

மேலும் திமுக ஆட்சியில் பலி எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறிய  ஜெயகுமார் முதல்வரின் அறிவிப்பை அதிகாரிகளும் கேட்பதில்லை. மக்களும் கேட்பதில்லை. திமுக ஆட்சியில் பிறப்பித்த ஊரங்கு ஊரடங்கு போலவே இல்லை என குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் 10 பேருக்கு நிவாரணம் கொடுத்துவிட்டு விளம்பரம் தேடும் கட்சி அதிமுக அல்ல என குறிப்பிட்ட ஜெயகுமார் ஒபிஎஸ் - இபிஎஸ் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை , ஒருங்கிணைப்பாளர்களின் சந்திப்பு எதார்த்தமானது எனக் கூறினார்.