சசிகலா ஒரு பேய், ஒரு வேஸ்ட் லக்கேஜ்,நம்பிக்கை துரோகி..! -சசிகலாவை தாறுமாறாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்.! 

சசிகலா ஒரு பேய், ஒரு வேஸ்ட் லக்கேஜ்,நம்பிக்கை துரோகி..! -சசிகலாவை தாறுமாறாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்.! 

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், நத்தம் தொகுதி எம்எல்ஏவான நத்தம் விஸ்வநாதன்  தலைமையில் சனிக்கிழமை திண்டுக்கல்லில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சசிகலாவுக்கும் அண்ணா திமுகவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது, அவர் அடிப்படை உறுப்பினரே இல்லை அவரை தொலைபேசியில் அல்லது வேறு எந்த ஒரு விதத்தில் தொடர்பு கொண்டால் அவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து எடுக்கப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் "சசிகலா கட்சியின் உறுப்பினரே கிடையாது. தற்பொழுது அவரது செயல்பாடுகள் வேடிக்கையாக உள்ளது. அதிமுகவை பொறுத்தவரை இரட்டை குழல் துப்பாக்கி போல் இ.பி.எஸ், ஒ.பி.எஸ் உள்ளனர். கட்சியை கட்டுக்கோப்பாக வழி நடத்திச் செல்கின்றனர். சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்வி கெளரவமான தோல்வி. இன்னும் சொல்லப்போனால் வெற்றிகரமான தோல்வி தான். ஆனால் அருமையான தலைமையில் அதிமுக சென்று கொண்டிருக்கிறது" எனக் கூறினார். 

மேலும், "இந்த நேரத்தில் கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்த சசிகலா முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்.  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் சசிகலாவை முற்றிலும் தன்னிடமிருந்து விலக்கி வைத்தவர். அதிமுகவில் பிளவை ஏற்படுத்த நினைக்கும் சசிகலாவிற்கு ஒரு போதும் அதிமுகவில் இடமில்லை.அதிமுக கட்சி வலிமையாக உள்ளது. ஜெயலலிதாவுக்கு தெரியாமல் நிறைய விஷயங்கள் நடந்துள்ளது. அதற்கு காரணம் சசிகலா தான். ஜெயலலிதா சசிகலாவினை தனது நம்பிக்கையான உதவியாளர் என்று  நம்பினார்.ஆனால் அவர் நம்பிக்கையாக நடக்கவில்லை. துரோகம் தான் செய்தார்" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் " ஜெயலலிதா இறப்பில் என்ன நடந்தது என்று சசிகலாவுக்கு மட்டும்தான் தெரியும். ஜெயலலிதா உயிருடன் இருக்கும் பொழுது சசிகலாவின் உறவினர்கள் தான் கட்சியில் அதிகாரம் செலுத்தினார்கள். தற்போது கட்சி சரியான இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சசிகலா அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஜெயலலிதா  இறப்பு குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதற்கான ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது" என்ற அவர்  

"சசிகலா தன்னை தாய் என்று கூறிக் கொள்கிறார். அதிமுகவை பொறுத்தவரை அவர் தாயல்லவா ஒரு பேய். அவர் ஒரு வேஸ்ட் லக்கேஜ், லக்கேஜ் சுமந்து செல்ல நாங்கள் ரெடியாக இல்லை.இந்த சலசலப்புக்கு அதிமுகவினர் அஞ்சமாட்டார்கள். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவினர் யாரும்  சசிகலாவிடம் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. சில பத்திரிக்கைகளும் ஊடகங்களும்  மாயையை ஏற்படுத்தி வருகின்றது.இந்த மாயையை  உடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், அதிமுக தொண்டர்கள் யாருக்கும் ஒருபோதும் விலை போகமாட்டார்கள். நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரசும் திமுகவும் தான் என்பது அப்பட்டமான உண்மை. அதிமுக ஆரம்பத்திலிருந்து நீட் தேர்வு எதிர்த்துக் கொண்டுதான் உள்ளது" எனத் தெரிவித்தார்.