பட்டாசு விபத்து; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதியுதவி...!

விருதுநகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, நிதியுதவி அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 3-ம் தேதி விருதுநகரில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசன் மற்றும் ராஜா இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். 

மேலும் ஆழ்ந்த இரங்கலை தெரித்துள்ள முதலமைச்சர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். அத்துடன், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com