முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை மறைவு...ஈபிஎஸ், சசிகலா இரங்கல்!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை மறைவு...ஈபிஎஸ், சசிகலா இரங்கல்!

முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் தந்தை மறைவிற்கு இபிஎஸ் மற்றும் சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளனர்.


2011 முதல் 2021 வரை சிவகாசி தொகுதி எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தடாலடி பேச்சுக்கு சொந்தக்காரர். தற்போது விருதுநகர் அதிமுக மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். அவரது தந்தை தவசலிங்கம்(93) வயது மூப்பு காரணமாக மதுரையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையிலிருந்தும் சில நாட்களாகவே உடல்நிலை மோசமடைந்து  வந்துள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை தவசலிங்கம் இயற்கை எய்தினார். அவரின் இறுதிச் சடங்கு இன்று மாலை அவரது சொந்த ஊரான திருத்தங்கலில் நடைபெறவுள்ளது. இதற்கு சட்டமன்ற நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருப்பதால், எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் செல்வது சந்தேகம் தான், இருப்பினும், மாவட்டத்திலுள்ள பல்வேறு கட்சியினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜேந்திர பாலாஜியின் தந்தை மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதேபோல், வி.கே.சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்த கடினமான நேரத்தில் மன தைரியத்தையும் , இந்த இழப்பை தாங்கி கொள்ளும் சக்தியையும் தர வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com