சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.58.7 லட்சம் மதிப்புடைய 1.22 கிலோ தங்கம், வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல்

குவைத்,துபாய்,இலங்கையிலிருந்து 3 விமானங்களில்  சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 58 புள்ளி 7 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கம், ஐ போன்கள், வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.58.7 லட்சம்  மதிப்புடைய 1.22 கிலோ தங்கம்,  வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல்

குவைத்திலிருந்து இண்டிகோ விமானம் மூலம் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சோ்ந்த ஒரு ஆண் பயணியை சோதனையிட்டதில் அவா் கொண்டு வந்திருந்த ஒரு மூடிப்போட்ட பாத்திரத்தின் கைப்பிடிகளில் தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனா்.

மேலும் இலங்கையிலிருந்து  வந்த சென்னையை சோ்ந்த பயணியிடமும் மறைத்து வைத்திருந்த தங்க நாணயங்களை  பறிமுதல் செய்தனா். இதற்கிடையே  ஃபிளை துபாய் விமானம் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்த பயணிகளை சோதனையிட்டபோது, ராமநாதபுரத்தை சோ்ந்த ஒரு பயணியிடமிருந்து 125 கிராம் தங்க சங்கிலி, ஐ போன்கள்,வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com