அப்பாடா...! ஒருவழியா அக்னி நட்சத்திரம் முடியப்போகுது...!

அப்பாடா...!  ஒருவழியா  அக்னி நட்சத்திரம் முடியப்போகுது...!

அக்னி நட்சத்திரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தொடங்கி  25 நாட்கள் நீடிக்கும்.இந்த நாட்களில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் என்பது அதிகமாக காணப்படும். குறிப்பாக, தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெப்பத்தின் உச்சத்தை தொடும். 

அந்த வகையில் இந்தாண்டு மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் மக்களை வாட்டி எடுத்தது.  குறிப்பாக தமிழகத்தில் பல இடங்களில் வெயில் 105 டிகிரியை தாண்டி பதிவாகி காணப்பட்டது.

இந்நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைய உள்ளது . அக்னி நட்சத்திரம் நிறைவடைய உள்ள நிலையில்,  தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. கோடை மழையால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.  

கடந்த 25 நாட்கள் நீடித்து வந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் வெப்பம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களும் மகிழ்ச்சியடைகின்றனர். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com