பிரபாகரன் உயிருடன் இருந்தால் நானே நேரில் செல்வேன் - கே.எஸ்.அழகிரி!

பிரபாகரன் உயிருடன் இருந்தால் நானே நேரில் செல்வேன் - கே.எஸ்.அழகிரி!

பிரபாகரன் உயிருடன் இருந்தால் தங்களுக்கும் மகிழ்ச்சி தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பேசிய அவர், சிங்கிளர்கள் பிடியில் இருந்த ஈழதமிழர்களை காப்பாற்றுவதற்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், அவர் குடும்பத்துடன் தான் தொடர்பில் இருப்பதாகவும், அவர் விரைவில் வெளியே வருவார் எனவும் பழ.நெடுமாறன் தெரிவித்தார். தொடர்ந்து, இது குறித்த அறிக்கையையும் பழ.நெடுமாறன் வெளியிட்டார். 

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகத்தில் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதாக அதிமுக சொல்வது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என குற்றம்சாட்டினார். மேலும், தீண்டாமைக்கு எதிராக தங்கள் கூட்டணி கட்சியான திமுக அரசு இருக்கிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், பிரபாகரன் உயிருடன் இருந்தால் தங்களுக்கும் மகிழ்ச்சி தான் என்றும்,  அவர் உயிருடன் இருந்தால் நானே நேரில் சென்று பார்ப்பேன் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com