“ஜெயலலிதாவுக்கு வாரிசு இல்லை என்றால் நாங்களா......” ஆர் எஸ் பாரதி!!!

“ஜெயலலிதாவுக்கு வாரிசு இல்லை என்றால் நாங்களா......” ஆர் எஸ் பாரதி!!!

அடுத்து வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து இடங்களையும் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் எஸ் பாரதி.

பிறந்தநாள் கூட்டம்:

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த இள்ளலூர் கூட்ரோட்டில் பேரூராட்சி கழக செயலாளரும் பேரூராட்சி தலைவருமான தேவராஜ் ஏற்பாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் கொண்டாடும் விதமாக நலத்திட்டங்களை வழங்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

தையல் இயந்திரம்:

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் எஸ் பாரதி சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளைச் சேர்ந்த மகளிர்களுக்கு தையல் இயந்திரம் மற்றும் சேலையும் அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கினர். 

வாரிசு இல்லை என்றால்:

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆர் எஸ் பாரதி கூறுகையில், அதிமுகவை சேர்ந்த எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா இவர்களுக்கு வாரிசு இல்லை என்றால் நாங்களா ஏற்பாடு செய்ய முடியும் எனக் கேட்ட அவர் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அவல நிலை போல் எந்த ஆட்சியிலும் நடைபெறவில்லை எனவும் எடப்பாடி பழனிச்சாமி எப்படி ஆட்சியில் அமர்ந்தார் என்பது உங்களுக்கு தெரியும் இருந்தாலும் கூவத்தூரில் ஒரு மாத காலமாக அனைத்து உறுப்பினர்களையும் அடைத்து வைத்து ஆட்சியைப் பிடித்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி எனவும் தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு:

தொடர்ந்து பேசிய அவர், சீமான் போன்றவர்கள் இளைஞர்களின் மனதை கலைப்பதற்காகவே உள்ளனர் எனவும் எனவே தாய்மார்கள் தங்களது பிள்ளைகளுக்கு நமது கட்சியின் வரலாறுகளை சொல்லி வளர்க்க வேண்டும் எனவும் கூறினார்.  மேலும், 
அடுத்து வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து இடங்களையும் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com