தமிழகத்தில் திமுகவின் பி டீம் தான் காங்கிரஸ்,.! பாஜக அண்ணாமலை விமர்சனம்.! 

தமிழகத்தில் திமுகவின் பி டீம் தான் காங்கிரஸ்,.! பாஜக அண்ணாமலை விமர்சனம்.! 

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பிராந்திய கட்சியாக உள்ளது என்றும் அது திமுகவின் பி டீமாக மாறிவிட்டது என்றும் பாஜக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கரூர் அருகே உள்ள பெரிய குளத்துப்பாளையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பாஜக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.

அதன்பின் பேசிய அவர் "மத்திய காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோது ஒன்றிய அரசு என்று , கூறவில்லை. அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி கூட ஒன்றிய அரசு என கூறவில்லை. ஆனால் தற்போது திமுகவினர் ஒன்றிய அரசு என்று பேச காரணம் என்ன?" என்று கேள்வியெழுப்பினார்.  

தொடர்ந்து பேசிய அவர் எப்போது நகர்ப்புற தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க பாஜக தயார், தேர்தலில் போட்டியிட பா.ஜ.வினர் ஆர்வமாக உள்ளனர். தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதால் தேர்தல் குறித்து பாஜக தலைமை முடிவு அறிவிக்கும்" என்றும் கூறினார். மேலும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பிராந்திய கட்சியாக உள்ளது என்றும் அது திமுகவின் பி டீமாக மாறிவிட்டது என்றும் விமர்சித்தார்.