புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனிடையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

தொடர்ந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, 2-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், மேலும் டிசம்பர் 3-ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு சூறாவளி புயலாகவும் மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர்  வடமேற்கு திசையில் நகர்ந்து, சென்னை மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் புயல் எச்சரிகையை தொடர்ந்து,  சென்னை கடலூர் நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com