தடையை மீறி உரிய தரம் இல்லாத ஜவ்வரிசி விற்கப்பட்டால் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கலாம்...

தடையை மீறி உரிய தரம் இல்லாத ஜவ்வரிசி விற்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளிக்கலாம் என  சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தடையை மீறி உரிய தரம் இல்லாத ஜவ்வரிசி விற்கப்பட்டால் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கலாம்...

தமிழகத்தில் ஈரப்பதத்துடன் கூடிய ஜவ்வரிசி விற்பனை தொடர்பான வழக்கில் கடைகளில் விற்கப்படும் ஜவ்வரிசியின் மூன்று மாதிரிகளை ஆய்வு செய்து, அறிக்கை சமர்பிக்க உணவு பாதுகாப்புத் துறை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 3 மாதிரிகளை ஆய்வு செய்ததில், ஜவ்வரிசியின் இரு மாதிரிகள் தரமானதாக இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.3 வது மாதிரியும் நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இல்லை என கூறப்பட்டுள்ளது.  இதை பதிவு செய்த நீதிபதி,  தடையை மீறி ஈரமான ஜவ்வரிசி விற்கப்படுவதாக இருந்தால், அதிகாரிகளுக்கு புகார் அளிக்கலாம்  என மனுதாரருக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தார்.