கொடநாடு வழக்கு: தனபால் மனைவியிடம் இபிஎஸ் தரப்பினர் பேரம்!!

கொடநாடு வழக்கு: தனபால் மனைவியிடம் இபிஎஸ் தரப்பினர் பேரம்!!

கோடநாடு வழக்கில் தனக்கெதிராக மனைவியை புகார் அளிக்க வைக்க இபிஎஸ் தரப்பில் பேரம் பேசப்பட்டதாக கனகராஜின் சகோதரர் தனபால் குற்றச்சாட்டிள்ளாா். 

கோடநாடு விவகாரம் தொடா்பாக தனபாலின் மனைவி செந்தாமரைச் செல்வி, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களை சந்தித்து பேசுகையில், கோடநாடு வழக்கு தொடர்பாக தனது கணவர் தனபால் கூறுவது உண்மையில்லை எனவும், யாரோ சொல்லிக் கொடுத்து பேசி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தனபால் செய்தியாளா்களை சந்தித்து பேசுகையில், கோடநாடு கொலை வழக்கு குறித்து 2017-ம் ஆண்டிலிருந்தே தவறுகளை குறிப்பிட்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் தான் யாரும் சொல்லிக் கொடுத்து பேசவில்லை என்று கூறியவர், தனது மனைவியின் குற்றச்சாட்டை மறுத்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சேலத்தின் முக்கிய புள்ளி ஒருவா் மூலம் தன்னிடம் பேரம் பேச வந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடா்பாக கோவையில் சிபிசிஐடி விசாரணையில் ஆஜராகி அனைத்து உண்மைகளையும் தொிவிக்கப் போவதாகவும், புகார் கொடுக்க தயாராக இருப்பதாகவும் தனபால் கூறியுள்ளார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com