சென்னை அடையாறு கிரவுண்ட் பிளாசா நட்சத்திர விடுதியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!!

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு சென்னை அடையாறு கிரவுண்ட் பிளாசா நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அடையாறு கிரவுண்ட் பிளாசா நட்சத்திர விடுதியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!!

கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்த நாளன்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

இதனால் அதிமுக எம்ஏக்கள் கூட்டம் அங்கு நடத்த முடியாத சூழல் உருவானது. தொடர்ந்து அதிமுக இடைக்கால செயலாளர் இபிஎஸ்-ன் வீட்டில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டும் அம்முடிவு திடீரென கைவிடப்பட்டது.

இந்நிலையில் சேலம் சென்றுள்ள இபிஎஸ் நாளை சென்னை திரும்பியதும் மாலை 4 மணிக்கு அடையாறு கிரவுண்ட் பிளாசா நட்சத்திர விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அரசு வழங்கியுள்ள இபிஎஸ் இல்லத்தில், கட்சிக்கூட்டம் நடத்தக்கூடாது என தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com