திருவள்ளூர் மாவட்டத்தில், விரைவில் மெகா பட்டு பூங்கா!!

திருவள்ளூர் மாவட்டத்தில், விரைவில் மெகா பட்டு பூங்கா!!

திருத்தணியில் விரைவில் கைத்தறி பட்டு பூங்கா அமைக்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சுமார் 1886 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா, திருவள்ளூர், டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கைத்தறி துறை அமைச்சர் காந்தி பங்கேற்று  37 லட்சத்து  72 ஆயிரம் மதிப்பிலான பரிசு தொகை பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.

அப்பொழுது பேசிய அவர், விருதுநகரில், பிஎம் மித்ரா திட்டத்தின் கீழ், ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மெகா ஜவுளி பூங்கா அமைப்பிற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், திருத்தணியில் நெசவாளர்கள் அதிகம் நிறைந்த பகுதியாக இருந்து வருவதால், திருத்தணியை மையமாகக் கொண்டு கைத்தறி பூங்கா கொண்டு வர இடம் தேர்வு செய்து வருவதாக கூறியுள்ளார்.

விரைவில் நெசவாளர்கள் பயனடையும் வகையில் கைத்தறி பூங்கா திருத்தணியில் அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி ராஜேந்திரன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்மற்றும் மாவட்ட விளையாட்டு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க || பெயரளவில் மட்டுமே இல்லத்தரசிகளான பெண்களுக்கு,.. மகுடம் சூட்டும் அங்கீகாரம் தான் இந்த தீர்ப்பு....!