தடுமாற்றத்தில் அதிமுக...எடப்பாடியை நிராகரிப்பார்கள்...தனியரசு பேச்சு!

தடுமாற்றத்தில் அதிமுக...எடப்பாடியை நிராகரிப்பார்கள்...தனியரசு பேச்சு!

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சென்னை பசுமை வழிசாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்தார்.

ஓபிஎஸ்  - தனியரசு சந்திப்பு :

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சென்னை பசுமை வழிசாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் இல்லத்திற்கு அவரை சந்திப்பதற்காக வருகை புரிந்திருந்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தனியரசு, வருகின்ற ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காகவே இங்கே வந்திருப்பதாக தெரிவித்தார். அ.தி.மு.க கொஞ்சம் தேர்தலில் தடுமாற்றத்தோடு இருப்பதாக தெரிவித்த அவர், கட்சியை வலுப்படுத்தி வெற்றிக்காக பாடுபடுவதில் தோழமைக் கட்சிகளை பன்னீர் செல்வம் சந்தித்து வருவதையும் பார்த்து வருவதாக கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர், ஓபிஎஸ்சை நிராகரித்துவிட்டு தேர்தலில் நிற்கும் எடப்பாடியாரை அதிமுகவின் ஒன்றைரை கோடி அண்ணா திமுகவின் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், கட்டாயமாக  எடப்பாடியை நிராகரிப்பார்கள் என்று நினைப்பதாக கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com