கோவில் அலங்கார வேலைகளை பாருங்க! இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு  

திருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை தரத்தினை நன்கு பராமரிக்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவில் அலங்கார வேலைகளை பாருங்க!  இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு   

திருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை தரத்தினை நன்கு பராமரிக்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், கலையம்சம் கொண்ட கட்டடக் கலை மற்றும் சுவரோவியங்களை பாதுகாத்தல் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட உத்தரவிட்டிருந்தது.

அதன்படி திருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை நன்கு பராமரிக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கோயில் அலங்கார வேலைப்பாடுகள் குறைபாடுகள் இருப்பின் உடனடியாக அதனை சீரமைக்கவும் உத்தரவு பிறப்பித்து அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com