தீவிரமடையும் நாடாளுமன்றத் தேர்தல் : கள ஆய்வில் ஆட்சியர்கள்..!

தீவிரமடையும் நாடாளுமன்றத் தேர்தல் : கள ஆய்வில் ஆட்சியர்கள்..!
Published on
Updated on
1 min read

வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் முகாமை அந்தந்த மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமினை அதிமுக மாவட்ட செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

காட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, நீக்கல், திருத்தம், மற்றும் முகவரி மாற்றம் செய்ய முகாம் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதனை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்  ப.குமார் நேரில் சென்று பார்வையிட்டு  ஆய்வு செய்தார். இதேபோல் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் சென்று ஆய்வு நடத்தினார்.

அதே போல, கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்தம் முகாமை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பணிகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்ததை அடுத்து, திருத்தம் செய்வதில் அதிக கவனம் செலுத்தி பணியாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

தொடர்ந்து, அரியலூர் தனியார் பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த முகாமை அம்மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 306  வாக்குசாவடி மையங்களிலும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 290 வாக்குசாவடி மையங்கள் என மொத்தமாக 596 வாக்குசாவடி மையங்களில் முகாம்கள் நடைப்பெற்றதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com