கோடீஸ்வரர்களுக்கு உதவுவதற்காகவே பாஜக ஆட்சி நடத்துகிறது..... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!!

கோடீஸ்வரர்களுக்கு உதவுவதற்காகவே பாஜக ஆட்சி நடத்துகிறது..... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!!

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரும் என சொல்லும் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டம் தெரியவில்லை என்றும் ,  நாங்களே ஆட்சியை கலைத்தால் மட்டும் தான் தேர்தல் வரும் எனவும் கூறியுள்ளார்.  

கர்நாடகா தேர்தல்:

மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று சொன்னால் தான் அதிமுகவினர் அவரோடு இருப்பார்கள் இல்லையென்றால் ஓபிஎஸ் உடன் சென்று விடுவார்கள் என்பதால் எடப்பாடி இப்படி பேசி வருகிறார் எனவும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் கர்நாடகா தேர்தலை தள்ளி வைத்திருக்க வேண்டுமே ஏன் தள்ளி வைக்கவில்லை எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

சமூக நீதிக் கூட்டமைப்பு :

அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு சமீப காலங்களாகவே இருந்து வருகிறது எனவும் சமூகநீதி கொள்கைகளில் இருந்து செயல்படக்கூடிய தலைவர்களை சந்திப்பதற்காகவும், சமூக நீதியின் தேவையை உணர்த்துவதற்காகவும் முன்னாள் நீதியரசர் தலைமையில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது எனவும் ஏற்கனவே சில கருத்தரங்குகளை நடத்தி உள்ளதாகவும் அந்த வகையில் இன்று நடைபெறக்கூடிய கருத்தரங்கமும் அமையும் எனவும் கூறினார். 

உயர்த்திபிடிக்கின்ற மாநாடு:

பாஜக அரசு ஐஐடி போன்ற நிறுவனங்களில் உள்ள இட ஒதுக்கீடு தொடர்பான சிக்கல்கள், ஐஐடியில் இசுலாமிய மாணவர்கள் தற்கொலை, தாழ்த்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுகின்ற ஆபத்துகளை எடுத்து சொல்லும் விதமாக,
சமூக நீதியில் அக்கறை உள்ள கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து இந்த மாநாட்டை நடத்துகிறார்கள் எனவும் இந்த மாநாடு இந்த நேரத்தில் தேவையான ஒன்று இது அரசியல் களத்திற்கான மாநாடு அல்ல சமூக நீதியை உயர்த்திபிடிக்கின்ற மாநாடு எனவும் தெரிவித்தார்.

பாஜக ஆட்சி:

நவீன் பட்நாயக் பாஜக ஆதரவு கட்சியாகவே இருப்பதாக தெரிகிறது எனவும் ஜெகன்மோகன் ரெட்டியின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை எனவும் கூறினார்.  மேலும் கோடீஸ்வரர்களுக்கு உதவுவதற்காகவே பாஜக ஆட்சி நடத்துகிறது எனவும் பிரதமர் மோடி பணக்காரர்களின் புரோக்கராக செயல்படுவதாகவும் 100 கோடி மக்கள் சேமிப்பு பணத்தை வங்கியில் செலுத்தினால் அதை ஏமாற்றுகிறார்கள் எனவும் இதுபோல தான் ஆருத்ரா நிறுவனமும் ஏமாற்றுகிறது எனவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com