தமிழ்நாடு முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..!!!

தமிழ்நாடு முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..!!!

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் இரண்டாவது முறையாக தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் மு.க.ஸ்டாலின்.  இந்த நாளில் தலைவர்கள் பலரும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி அவரது வாழ்த்துகளை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஜி.  நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகள்.” எனப் பதிவிட்டுள்ளார்.  

அதேபோல தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”தமிழக முதல்வர் திரு. மு. ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  நீண்ட ஆயுளோடு, பொது வாழ்வில் இன்னும் பல ஆண்டுகள் அவரது பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!.” எனப் பதிவிட்டுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com