பள்ளிகள் திறப்பு தேதியில் அதிரடி மாற்றம்...மாணவர்களுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

பள்ளிகள் திறப்பு தேதியில் அதிரடி மாற்றம்...மாணவர்களுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றியமைத்து பள்ளிக்கல்வி துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திருச்சியில் மாவட்ட கல்வி அலுவலா்களுடன் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இணைய வழியில் ஆலோசனை நடத்தினாா். அப்போது அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்தும், பள்ளித் தூய்மை, விலையில்லாப் பொருட்களை உடனே வழங்குவது, தமிழ் கட்டாய பாடம் தனியார் பள்ளிகள் பின்பற்றுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும், தனியார் பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு நல்ல முறையில் இருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தினார். 

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அன்பில் மகேஷ், தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முதலமைச்சருடன் ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படும் என தொிவித்தாா். இதற்கு முன்னதாக, தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், தமிழ்நாட்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளார். கோடை வெயிலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com