விற்கும் சிம்கார்டுகள் தீவிரவாதிகளுக்கு பயன்படுகிறது,.! மொபைல் விற்பனையாளர்கள் புகார்,.! 

விற்கும் சிம்கார்டுகள் தீவிரவாதிகளுக்கு பயன்படுகிறது,.! மொபைல் விற்பனையாளர்கள் புகார்,.! 

சாலையோரங்களில் விற்கப்படக்கூடிய சிம்கார்டுகள் தீவிரவாத செயலுக்கு பயன்படுத்துவதாகவும்,இதனை தடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுலகத்தில் மொபைல் அசோசியேஷன் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. .

சாலையோரங்களில் விற்கக்கூடிய சிம்கார்டுகளை ஆதார்கார்டு போன்ற ஆவணங்களை கொடுத்து வாங்கினால்,அதே ஆவணங்கள் மூலம்  தீவிரவாத கும்பலுக்கு சிம்கார்டுகள் வழங்கபடுவதாக  அனைத்திந்திய மொபைல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், அனைத்து சிம்கார்டு நெட்வொர்க் கம்பெனிகள் தங்களது வாடிக்கையாளரை அதிகபடுத்துவதற்காக ஊழியர்களிடம் சிம்கார்டுகள் கொடுத்து சாலையோரங்களில் விற்க கொடுப்பது வழக்கம்.

அந்த சிம்கார்டுகளை வாடிக்கையாளர் வாங்கும் போது தங்களது ஆதார் எண் போன்றவற்றை வழங்குவதாகவும்,அந்த ஆதார் எண்களை வைத்து அவரது பெயரிலேயே ஊழியர் மற்றொரு சிம்கார்டு பெற்று அதை தீவிரவாத கும்பலுக்கு,வடமாநில கால்சென்டர் கும்பல்,ஏடி.எம் மோசடி கும்பல் போன்றவற்றிற்கு வழங்குவதாக கூறினார். இதனால் தீவிரவாத செயலில் ஈடுபட்ட நபரை செல்போன் எண் மூலம் டிராக் செய்தால் சிம்கார்டு வாங்கிய நபர் சிக்கி வருகின்றனர்.

குறிப்பாக, கன்னியாகுமரி எஸ்.ஐ வில்சனை தீவிரவாத கும்பல் சுட்ட வழக்கில் செல்போன் எண்ணை வைத்து தேடும் போது சாலையோரங்களில் விற்கக்கூடிய 5 சிம்கார்டை கள்ளதனமாக வாங்கியது தெரியவந்ததாக அவர் கூறினார்.மேலும் பேசிய அவர்,கடையில் சிம்கார்டுகளை வாங்கி குற்றசெயலில் ஈடுபட்டால் சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர் சிக்குவார்கள்,ஆனால் சாலையோரங்களில் விற்கக்கூடிய சிம்கார்டுகள் குற்றசெயலில்  சிக்கினால் விநியோகஸ்தர் மீது பழிப்போட்டு தப்பித்துவிடுவார்கள் என கூறினார்.

மேலும், சாலைகளில் சிம்கார்டுகள் விற்கபடுவது சட்டவிரோதமான செயல் எனவும் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.சாலைகளில் விற்கக்கூடிய சிம்கார்டுகளை பொதுமக்கள் வாங்க வேண்டாம் எனவும் இதனால் பல பிரச்சனைகளில் சிக்க வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.