மாநில அளவிலான மல்லர்கம்ப விளையாட்டு போட்டி...300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு..!

விழுப்புரத்தில் மாநில அளவிலான மல்லர்கம்ப விளையாட்டு போட்டி நடைபெற்றது. அதில் தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
மாநில அளவிலான மல்லர்கம்ப விளையாட்டு போட்டி...300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு..!

விழுப்புரத்தில் மாநில அளவிலான மல்லர்கம்ப விளையாட்டு போட்டி நடைபெற்றது. அதில் தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர்.   

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் முதன்மையானதாக விளங்கும் மல்லர் கம்ப விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் மீண்டும் புத்துயிர்பெற்று வருகிறது. நடப்பட்ட மரத்தூனில் உடலை வில்லாக வளைத்து மல்லர்கம்பம் என்றும், கயிரில் உயரத்தில் சுற்றி சுழண்டு செய்வது கயிறு மால்கம் என இரு வகையாக அழைக்கப்படுகிறது. உடலை வில்லாக வளைத்து, சுழன்று விளையாடுவதால் வீரர்களின் உடல்நலனும், மன நலனும் சிறப்பாகவும், ஆரோக்கியத்துடனும், மற்ற விளையாட்டுகளுக்கு அடிப்படையாகவும் அமையும் சிறப்பு வாய்ந்த விளையாட்டாக மல்லர்கம்பம் உள்ளது.

 
 
விழுப்புரம் மல்லர் கம்ப கழகத்தின் சார்பில் மாநில அளவில் சிறப்பு மல்லர்கம்ப விளையாட்டி போட்டிகள் நடைபெற்றது. விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் மல்லர் கம்ப விளையாட்டு போட்டியில், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்துக்கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் மாநிலம் முழுவதிலுமிருந்து வந்திருந்த மல்லர் கம்ப குழுக்களில் சிறப்பாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து தேசிய அளவிலான போட்டிகளுக்கு பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது.

பாரம்பரிய விளையாட்டுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பள்ளி  விளையாட்டுகளில் சேர்த்ததன் மூலம் தற்போது பள்ளி மாணவர்கள் ஆர்வமாக கற்றுவருகின்றனர். இதன் மூலம் நம்மை உறுபடுத்திக்கொள்ள முடியும். தமிழகத்தில் மட்டுமே இருந்த மல்லர் கம்ப விளையாட்டு தற்போது தேசிய அளவிலும், உலக அளவிலும் கொண்டு செல்லப்பட்டது. மல்லர் கம்ப விளையாட்டை ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகளில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com