ஒத்த அறிவிப்பால் ஆசிரியர்களை குஷிப்படுத்திய தமிழக அரசு!

தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 3 ஆயிரத்து 296 ஆசிரியர் பணியிடங்களை, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஒத்த அறிவிப்பால் ஆசிரியர்களை குஷிப்படுத்திய தமிழக அரசு!

தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 3 ஆயிரத்து 296 ஆசிரியர் பணியிடங்களை, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த 2011-12ஆம் கல்வியாண்டில், 2 ஆயிரத்து 64 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 344 உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடங்கள் சேர்த்து மொத்தம் 2 ஆயிரத்து 408 ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 888 ஆசிரியர் அல்லாத பணியிடங்ள் என ஒட்டுமொத்தமாக 3 ஆயிரத்து 296 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த பணியிடங்கள் கடந்த 2018-ல் இருந்து 2021 பிப்ரவரி வரையில் மூன்றாண்டு நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் மூன்று ஆண்டு நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2024 பிப்ரவரி வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com