புள்ளிங்கோக்களுக்கு போலீஸ் கட்டிங் செய்த ஆசிரியர்...!!!

புள்ளிங்கோக்களுக்கு போலீஸ் கட்டிங் செய்த ஆசிரியர்...!!!

அறிவுறுத்தல்களை மீறி விதவிதமாக முடி வைத்திருந்த மாணவர்களுக்கு சொந்த செலவில் ஆசிரியர் சிகை அலங்காரம் செய்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருவூர் அரசு மாதிரி உயர்நிலைப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகம் சார்பில் பெற்றோர்களுக்கு மாணவர்கள் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கிறது.  பள்ளிக்கல்வித்துறை உத்தரவின் பேரில் கையில் மோதிரம், அணிந்து வரக்கூடாது எனவும் சீருடை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

இதனையும் மீறி புள்ளிங் கோ ஸ்டைலில் முடி வைத்திருந்த மாணவர்களுக்கு சொந்த செலவில் சிகை அலங்காரம் செய்திருக்கிறார் அப்பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் அருணன்.  மேலும் முழுக்கால் சட்டையை முக்கால் கால் அளவிற்கு விதவிதமாக பள்ளிக்கு அணிந்து வந்த ஒன்பதாம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்கள் 50 பேருக்கு டெய்லரை பள்ளிக்கு வரச் சொல்லி ஒரே மாதிரியான சீருடையையும் தைத்து தந்திருக்கிறார் ஆசிரியர் அருணன்.

புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வைத்திருந்த அனைவருக்கும் போலீஸ் கட்டிங் செய்த ஆசிரியரின் இந்த காட்சிகள் இணையதளத்திலும் வேகமாக பரவி வருகிறது.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com