தக்காளியை பரிசாக வழங்கி மணமக்களை ஆச்சர்யபடுத்திய விஜய் மக்கள் இயக்கத்தினர்...

கோவையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், விஜய் மக்கள் இயக்கத்தினர் தக்காளியை பரிசு வழங்கி மணமக்களை ஆச்சர்யப்படுத்தினர்.
தக்காளியை பரிசாக வழங்கி மணமக்களை ஆச்சர்யபடுத்திய விஜய் மக்கள் இயக்கத்தினர்...

வழக்கமாக வெங்காயம் தான் அதிரடியாக விலை உயர்ந்து நடுத்தரவர்க்க மக்களை அழ வைக்கும். ஆனால் இம்முறை சற்று வித்தியாசமாக தக்காளி அந்த வேலையைப் பார்த்து வருகிறது. காய்கறிகளில் முக்கியமாக சொல்லப்படுவதில் ஒன்று தான் தக்காளி, தக்காளி இல்லன்னா சமையலே இல்லை என்றும் சொல்லலாம். வைக்கிற குழம்பில் இருந்து. ரசம், கூட்டு, தக்காளி சாதம் என்று சமையலில் எங்கு பார்த்தாலும் தக்காளி மயம் தான். அப்படிபட்ட தக்காளியின் விலை திடீர் என்று கிடு கிடுவென உயர்ந்தது பொதுமக்களை திணற வைத்துள்ளது என்றே சொல்லலாம்.

 
இந்தநிலையில் கோவையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் தக்காளியை பரிசாக அளித்து மணமக்களை ஆச்சர்யபட வைத்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது. ஆம் கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி துணை தலைவராக இருப்பவர் தான் மகேஷ்வரன், இவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோவை குறிச்சி பிரிவு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் திடீரென மணமக்களுக்கு தக்காளி பரிசு வழங்கி ஆச்சரியப்படுத்தினர். இது வரை இல்லாத அளவிற்கு தக்காளியின் விலை உயர்ந்துள்ள நிலையில் மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய வீடியோ தற்போது  பெரும் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com