பாஜகவுக்கு இரண்டு தலைவர்கள் உள்ளனர்-கே.எஸ்.அழகிரி!

பாஜகவுக்கு இரண்டு தலைவர்கள் உள்ளனர்-கே.எஸ்.அழகிரி!

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சிக்கு இரண்டு தலைவர்கள் உள்ளதாகவும், தலைவராக அண்ணாமலையை விட ஆளுநர் ரவி சிறப்பாக செயல்படுவதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி மேலும் கூறியதாவது, முரண்பாடான தகவல்களை கூறினால் செய்தியில் தினம் வரும் என யாரோ சொல்லியிருக்கிறார்கள். அதை வைத்து அண்ணாமலை முரண்பாடாக பேசி வருகிறார். 

ஒரு கட்சியின் மீது குற்றச்சாட்டை சொல்லும்போது கண்ணை மூடிக்கொண்டு குற்றச்சாட்டு சொல்லும் பழக்கத்தை வைத்துள்ளார். இப்போது அவருக்கு போட்டியாக இன்னொரு பிஜேபி தலைவர் வந்துவிட்டார். அவர்தான் ஆளுநர் ரவி. அவர் அண்ணாமலையை பல விஷயங்களை பேசுவதால் ஊடகங்களின் கவனம் அவர் மீது சென்றுவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.