தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் நாள் மாற்றப்பட்டுள்ளது

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் நாள் மாற்றப்பட்டுள்ளது

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 30-ம் நாள் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் புதிய தொழிற்கொள்கை, பரந்தூர் புதிய விமான நிலையம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வரும் ஆகஸ்ட் 30 ஆம் நாளுக்கு பதிலாக ஆகஸ்ட் 29 ஆம்  நாள் மாலை 6 மணிக்கு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.