UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு......

UPSC தேர்வு முடிவுகள்  வெளியீடு......


2022ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. இறுதி தேர்வு முடிவுகள் வெளியானது.  இதில்இஷிதா கிஷோர் யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற பணியிடங்களுக்கும், குரூப்-ஏ, குரூப்-பி பிரிவில் உள்ள பிற பணியிடங்களையும் நிரப்புவதற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் போட்டித்தேர்வை நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி நாடு முழுவதும்  180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,022 இடங்களுக்கு நடந்த தேர்வில் மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்திய அளவில் யு.பி.எஸ்.சி. தேர்வில் முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர். அதன்படி யுபிஎஸ்சி இறுதித் தேர்வில் இஷிதா கிஷோர் முதலிடம், கரிமா லோஹியா 2-வது இடம், உமா ஹராதி 3-வது இடம் பிடித்தனர்.

தமிழ்நாட்டைப்பொறுத்தவரை சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஜீஜீ என்ற மாணவி தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்துள்ளார். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படித்த இவர் முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவரது தந்தை எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com