மகளிர் உரிமை தொகை விண்ணப்பித்தும் கிடைக்காத பெண்கள்..!

மகளிர் உரிமை தொகை விண்ணப்பித்தும் கிடைக்காத பெண்கள்..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்தும் கிடைக்காததால், காரணம் அறிய ஏராளமான பெண்கள் வட்டாச்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தினை  15 ஆம் தேதி  முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் தகுதியுள்ள ஒரு கோடியே 6,50,000 பேருக்கு மட்டும் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் மகளிர் உரிமை தொகை   விண்ணப்பித்து கிடைக்க பெறாதவர்கள்  செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அதற்கான காரணம் தெரிய மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் தகுதியிலிருந்தும் நிராகரிக்கப்பட்டு இருந்தால் 30 நாட்களுக்குள் கோட்டாச்சியரிடம்  மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மகளிர் உரிமை தொகை கிடைக்க பெறாதவர்களுக்கு குறுஞ்செய்தி வரவில்லை இதனால்  மகளின் உரிமைச் துறைக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் நிராகரித்திற்கான  காரணம் குறித்து அறிய காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏராளமான பெண்கள் குவிந்துள்ளனர்.

மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதோர் கூறும் போது:-

“தகுதி இருந்தும் எங்களைப் போன்ற ஏழைகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்காதது வருத்தமாக உள்ளது; வசதி படைத்தவருக்கு கொடுத்துள்ளனர்”,  என வருத்தமுடன் கூறினர்.  மேலும் காரணத்தை அறிவதற்கு 30 முதல் 40.கி.மீ தூரம்  அலைய விடுவதாகவும் குற்றம் சாட்டினர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com