விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு - உயிர் தப்பிய 150 பயணிகள்!

சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட இருந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறால் விமானம் ரத்து செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு புறப்பட இருந்த விமானம், ஓடுபாதைக்கு சென்றபோது அதில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்த நிலையில், அது குறித்து உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க : அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் ஐ.டி. ரெய்டு... அதிகாலை முதல் அதிரடி சோதனை!

இதையடுத்து விமானத்தில் இருந்து பயணிகள் கீழே இறக்கப்பட்டு ஓய்வறைகளில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் இயந்திரக் கோளாறை சரிசெய்ய முடியாததால் விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்ய விருந்த 150 பயணிகளும் தக்க சமயத்தில் இறக்கப்பட்டதால் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.