இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்‌ச ராஜினாமா..!

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்‌ச ராஜினாமா செய்தார். 

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்‌ச ராஜினாமா..!

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவையும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவையும் பதவி விலகக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்சே முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் என்று அவர் தெரிவித்து இருந்தார்.

இதனிடையே அவரது ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கும் வகையில், கொழும்புவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கொழும்புவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ராஜபக்ச சகோதரர்களின் பதவி விலகல் மட்டுமே பிரச்சனைகளுக்கு தீர்வு என மக்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில்  பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்‌ச ராஜினாமா செய்தார். தனது இராஜினாமா கடிதத்தை அதிபரும், தனது இளைய சகோதரருமான கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது..