45 ரூ. பதக்கத்தில் ஸ்டிக்கர் ஒட்டிதங்க பதக்கம் என ஏமாற்றிய கல்லூரி.. மாணவியின் வைரலாகும் வீடியோ...

பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக ரேங்க் கோல்டர்களுக்கு கோல்டு மெடல் வழங்குவதாக கூறிவிட்டு தகர மெடல் வழங்கி கல்லூரி நிர்வாகம் ஏமாற்றியதாக சமூக வலைதளத்தில் வீடியோ வைரலாகி வருகிறது. 
45 ரூ. பதக்கத்தில் ஸ்டிக்கர் ஒட்டிதங்க பதக்கம் என ஏமாற்றிய கல்லூரி.. மாணவியின் வைரலாகும் வீடியோ...
Published on
Updated on
2 min read

விருதுநகர் | காரியாபட்டி அருகே உள்ள தனியார் (சிஇஓஏ) கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குமார் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாளர் தர்மராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

இக்கல்லூரியில் சேரும் மாணவ மாணவியர்களிடம் யுனிவர்சிட்டி ரேங்க்  எடுப்பவர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் ஒரு லட்ச ரூபாய் ரொக்க பணமும், கோல்ட் மெடல் வழங்கப்படும் என மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கல்லூரி நிர்வாகம் சொல்லியதாக கூறப்படுகிறது.

அதனையொட்டி கல்லூரியில் 2017 முதல் 2020 வரை  வணிகவியல் பாட பிரிவு படித்த மாணவி தீபலெட்சுமி என்பவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.

மேலும் பல்கலைக்கழக அளவில் இரண்டாவது இடமும், நான்காவது இடமும், ஆறாவது இடமும் பிடித்து மாணவிகள் சாதனை படைத்தனர். அவர்களை தங்கப்பதக்கம் வென்றவர்கள் என  கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவித்து மாணவர்கள் சேர்க்கைக்காக சுவரொட்டிகளில் விளம்பரம் செய்து வந்தனர்.

இந்நிலையில் பட்டமளிப்பு விழாவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தரவரிசை பெற்றவர்களுக்கு ஒரு லட்சம் ரொக்க பணம் கொடுக்காமல் ஏமாற்றியும், தங்க பதக்கத்திற்கு பதிலாக 30 ரூபாய் மதிப்புள்ள தகர மெடலை கோல்டு மெடல் எனக்கோரி வழங்கியதால் பல்கலைக்கழக முதலிடங்களை பிடித்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் கல்லூரியில் படித்து பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பிடித்த மாணவ, மாணவிகள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளதோடு. மேலும் கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு நம்பிக்கை மோசடி செய்துள்ளதாக மாணவிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் பல்கலைக்கழக தர வரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த கல்லூரி மாணவியின் ஆதங்க வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com