ஆச்சரியப்பட வைக்கும் அக்கா - தம்பி பாசம்! 2 மணி நேரம்...5 கிலோ எடை... கடிதத்தால் பாசத்தை வெளிபடுத்திய சகோதரி!

கேரளா மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், உலக சகோதரர் தினத்திற்கு தன் சகோதரருக்கு வாழ்த்து தெரிவிக்க மறந்த நிலையில்,ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் 434 மீட்டர் நீளம் கொண்டதாகவும், 5 கிலோ எடை கொண்டதாகவும் உள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
ஆச்சரியப்பட வைக்கும் அக்கா - தம்பி பாசம்! 2 மணி நேரம்...5 கிலோ எடை... கடிதத்தால் பாசத்தை வெளிபடுத்திய சகோதரி!

பொதுவாகவே சகோதர- சகோதரி பாசாமானது சிறந்தது. அதாவது ஒரு சகோதரி, சகோதரன் மீது வைத்திருக்கும் அன்பு ஒரு தாயின் அன்பிற்கு இணையானது. இப்போதுள்ள காலகட்டத்தில், நாம் யாரிடமாவது பேச வேண்டும் என நினைத்தால், உடனடியாக தொலைபேசியில் தொடர்புக்கொண்டோ அல்லது குறுஞ்செய்தி மூலமோ தொடர்கொள்கிறோம். ஆனால் முந்தைய காலத்தில் ஒருவரை தொடர்பு கொள்வது என்பது மிகுந்த சிரமமான ஒன்று, கடிதத்தில் எழுதி தபால் மூலம் அது அவர்கள் கையில் சென்று சேருவதற்கே 3 அல்லது 4 நாட்கள் ஆகி விடும். அவசர செய்தியாக இருந்தால் தந்தி மூலம் பகிரப்படும். இதெல்லாம் நாம் அறிந்தது தான். 

அதே போல் கேரளாவை சேர்ந்த ஒரு பெண், தன் சகோதரருக்கு, சகோதர தின வாழ்த்துக்களை சொல்ல மறுத்ததால், ஒரு கடிதம் மூலம் தன் மனதில் உள்ளவற்றை பகிர்ந்துள்ளார். அந்த கடிதம் 434 மீ நீளம் கொண்டது. கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள பீர்மேட் பகுதியை சேர்ந்த க்ரிஷ்ணப்ரியா என்ற பெண் பொறியாளர் தனது 21 வயது தம்பியான க்ரிஷ்ணபிரசாத்துக்கு உலக சகோதர தினத்தில் வாழ்த்துக்களை கூற மறந்துள்ளார். அவரது வேலை பிசியில் மறந்துள்ளார். 

க்ரிஷ்ணபிரசாத், தனது சகோதரிக்கு, குறுஞ்செய்தியும் அனுப்பி இருக்கிறார். ஆனால் கிருஷ்ணா ப்ரியாவோ, தனது வேலை பளுவினால், அந்த குறுஞ்செய்தியை பார்க்கவும் தவறியுள்ளார். மேலும் க்ரிஷ்ணபிரசாத், அவருக்கு பலர் அனுப்பிய சகதோர தின வாழ்த்துக்களையும் screenshot எடுத்து அத்தனையும் சகோதரிக்கு அனுப்பியுள்ளார். அதனால் மனமுடைந்த அவர், அவரது சகோதரியை வாட்சப்பில் பிளாக் செய்துள்ளார். 

அதன்பின்னர், தான் பார்க்காமல் தவறவிட்ட செய்திகளை பார்த்த க்ரிஷ்ணபிரியா ஒரு கடிதம் எழுத தொடங்கியுள்ளார். முதலில் ஏ4 அளவு கொண்ட பேப்பரில் கடிதம் எழுத யோசித்த அவள், பின்னர் தான் நினைக்கும் அனைத்தையும் எழுத்த ஏ 4 பேப்பர் பத்தாது என்பதால், 15 பேப்பர் ரோல்களை வாங்கி கடிதம் எழுத தொடங்கி 12 மணி நேரத்தில் எழுதி முடித்துள்ளார். அதன் நீளம் 434 மீ ஆகும். இது பற்றி க்ரிஷ்ணபிரியா கூறும் பொது, " நான் அவரை வாழ்த்த மறந்துவிட்டேன். நான் ஒவ்வொரு வருடமும் சகோதர தினத்தன்று அவரை அழைப்பது அல்லது அவருக்கு குறுஞ்செய்தி அனுப்புவது  வழக்கமான ஒன்று. ஆனால் இந்த ஆண்டு எனது பிஸியான வேலை பளுவால் மறந்துவிட்டேன். அவன் மற்றவர்களிடமிருந்து பெற்ற அனைத்து வாழ்த்துக்கள் ஸ்கிரீன் ஷாட்களை எனக்கு அனுப்பியதை பார்த்தேன். நாங்கள் தாய்-மகன் உறவைப் பகிர்ந்து கொள்கிறோம். அவர் என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டு, என்னை வாட்ஸ்அப்பில் பிளாக் செய்ததால் நான் வருத்தமாக இருந்தேன். அதனால் தான் கடிதம் எழுத முடிவு செய்தேன். கடிதத்திற்கு பயன்படுத்திய ஒவ்வொரு ரோலும் 30 மீட்டர் என்பதால் கடிதத்தை பேக் செய்வது எனக்கு பெரிய சவாலாக இருந்தது. செலோ டேப் மற்றும் கம் ஆகியவற்றை ஒன்றாக இணைக்க நான் பயன்படுத்தினேன். தபால் துறை எந்த கேள்வியும் இல்லாமல் கடிதத்தை ஏற்றுக்கொண்டது. இதன் எடை 5.27 கிலோகிராம் இருந்தது" என கூறியுள்ளார். 

இரண்டு நாட்களுக்கு பிறகு க்ரிஷ்ணபிரசாத்துக்கு கடிதம் கிடைத்த போது முதலில் அவர் அதனை பிறந்தநாள் பரிசாக எண்ணியதாகவும், பின்னர் அதனை பிரித்து பார்த்த பிறகு, குழம்பி போனதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த கடிதம் இதுவரை எழுதப்பட்ட மிக நீண்ட கடிதம் என்ற சாதனைக்காக கின்னஸ் உலக சாதனைக்கும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனால் நெட்டிசன்கள் பலரும் என்ன ஒரு அக்கா தம்பி பாசம் என அவர்களை பாராட்டி வருகின்றனர்.   

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com