ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது அல்ல...! பி.டி.ஆர்...!!

ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது அல்ல...! பி.டி.ஆர்...!!

சமூக வளைத்தளங்களில் பரவிவரும் ஆடியோவில் உள்ள குரல் தன்னுடையது அல்ல நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.  

திமுக அரசு ஊழல் செய்துள்ளதாக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக அண்மையில் ஒரு குரல் பதிவு வலைத் தளங்களில் வைரலானது. அதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும் இளைஞர் நலன் மேம்பாடு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோர் ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாக கூறப்பட்டிருந்தது. 

இந்த விவகாரம் தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோவில் உள்ள குரல் தனது அல்ல என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், திமுக அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் பொய்யான ஆடியோவை வெளியிட்டு வருவதாகவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

முன்னதாக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகிய இருவரும் ஒரே வருடத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடாக சம்பாதித்துள்ளதாக அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பேசியது போல குரல் பதிவு ஒன்றை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இணையதளத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com