ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்ட ராட்சத கரும்பு தேரை...

ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்ட ராட்சத கரும்பு தேரை...

ஆச்திரேலியா காடுகளில் 2.7 கிலோ எடையிலான ராட்சத கேன் தவளை, அதாவது கரும்பு தேரை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதனை அதிகாரிகள் கொன்றுள்ளனர்.
Published on

தவளைகள், தேரைகள் பல வகை. அதிலும் ஒரு சில தவளை வகைகள், பாம்புகளையே உண்ணும் அளவிற்கு மிகவும் விஷமுடையது என்றேல்லாம் அறியப்படுகிறது. தவளைகளி ஒரு சிலருக்கு மிகவும் பிடித்த ஒரு செல்லப்பிராணியாக இருந்தாலும், பெரும்பான்மையினருக்கு தவளைகள் என்றால் ஒரு அருவருப்பு தோன்றும்.

ஆனால், அது சிறிதாக இருக்கும் என்பதால் பயம் குறைவாகவே இருக்கும். அதே பயமுறுத்தும் தவளை ஒரு மனிதனை தாக்கும் அளவில் பலமானதாகவும், சுமார் 2.7 கிலோவுக்கும் மேலான ஒரு தவளையாகவும் நீங்கள் நேரில் பார்த்தால், என்ன செய்வீர்கள்?

உண்மையில், ராட்சத கேன் தவளை என்ற கரும்பு தேரை ஒன்று ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்டு, அதனை கருணை கொலை செய்துள்ளனர் ஆஸ்திரேலிய அதிகாரிகள். ஆஸ்திரேலியாவில் உள்ள கடற்கரை பூங்காவிற்கு அருகில் உள்ள காடுகளில், இந்த மிக பெரிய ப்ரவுன் நிற கரும்பு தேரை அதிகாரிகளாக கண்டெடுக்கப்பட்டது.

குவீன்ஸ்லேண்டு கான்வே தேசிய பூங்காவிற்கு சென்று கொண்டிருந்த போது, அதிகாரிகள் இந்த 6 பவுண்ட் அதாவது, 2.7 கிலோ எடையுடைய இந்த கரும்பு தேரையை கண்டுள்ளனர். அதுவும், ஒரு பாம்பு தப்பியோடுவதை கவனித்து தான் இந்த தவளைப் பற்றி தெரிந்துகொண்டுள்ளனர்.

1935ம் ஆண்டில் குயின்ஸ்லாந்தில் கரும்புத் தேரைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது மற்ற வனவிலங்குகளுக்கு அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த கரும்பு தேரையின் எடை மற்றும் அளவை வைத்து இது பொரு பெண் தேரை என அதிகாரிகள் யூகிக்கின்றனர்.

பொதுவாக 15 ஆண்டுகள் வரை வாழும் ஆம்பிபியனான இந்த தேரைகளில், இவ்வகை தேரைகளின் பெண்ணினம், பொதுவாக ஒரு காலத்தில் மட்டுமே 30,000 முட்டைகள் வரை இடுமாம். மேலும், மிகவும் விஷமான இந்த தேரைகளால பல உயிரினங்கள் அழிவது கூட நிதர்சணம் என அடிகாரிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com