அமெரிக்க தேர்தலில் மிகப்பெரிய மோசடியா....ஏமாற்றப்பட்டாரா ட்ரம்ப்?!!!

அமெரிக்க தேர்தலில் மிகப்பெரிய மோசடியா....ஏமாற்றப்பட்டாரா ட்ரம்ப்?!!!

அமெரிக்காவின் 2020 தேர்தல் "பெரிய மோசடி".  அமெரிக்க அரசியலமைப்பை நீக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் டொனால்ட் டிரம்ப்.

மீண்டும் மீண்டும்:

2024 தேர்தலில் போட்டியிடப் போவதாக அண்மையில் அறிவித்திருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் 2020 தேர்தல் விவகாரத்தை எழுப்பியுள்ளார்.   2020 தேர்தல் "பெரிய மோசடி" என்று கூறி, அமெரிக்க அரசியலமைப்பை ஒழிக்க வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  

மேலும் அவருக்கு எதிராக திரும்ப பெறப்படும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து செயல்படுவதாக கூறியுள்ளார்.

டிரம்பின் குற்றச்சாட்டுகள் என்ன?:

ட்ரம்ப் தனது சமூக வலைப்பின்னல் செயலியான TruthSocialல் 2020 தேர்தல் பெரிய மோசடிகளால் சிதைக்கப்பட்டதாக எழுதியுள்ளார்.  இது அரசியலமைப்பில் காணப்படும் அனைத்து விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை சிதைக்கிறது எனக் கூறியுள்ளார்.  மேலும் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அவருக்கு எதிராக  சதி செய்வதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.  

அரசியலமைப்பு மற்றும் அதன் அனைத்து கொள்கைகள் மீதான தாக்குதல் நமது தேசத்தின் ஆன்மாவிற்கு எதிரானது எனவும் இதுபோன்ற பேச்சுக்கள் வெறுக்கத்தக்கது எனவும் இது உலகளவில் கண்டிக்கப்பட வேண்டும் என்றும் டிரம்பின் பதிவிற்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. 

அரசியலமைப்பின் மிகப்பெரிய எதிரி: 

டிரம்ப்பின் எதிர்ப்பாளராக கருதப்படும் லிஸ் செனியும் டொனால்ட் டிரம்ப் மீது பெரிய விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.  2020 தேர்தல் முடிவை மாற்றியமைக்க அரசியலமைப்பின் அனைத்து விதிகள், ஒழுங்குமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார்.  

அவர் கடந்த காலங்களிலும் இதே எண்ணத்தை தான் கொண்டிருந்தார் இன்றும் அதே எண்ணமாக உள்ளது போலும் எனவும் டிரம்ப் அரசியலமைப்பின் எதிரி என்பதை எந்த நேர்மையான நபரும் மறுக்க முடியாது. எனவும் அவர் கூறியுள்ளார்.

எதற்காக?:

ட்ரம்பின் தன்னுடைய இருப்பை மக்களிடம் தெரிவிக்கவே இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து வருகிறார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.  மேலும் 2024 தேர்தலில் அவர் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதையும் இங்கு கவனிக்க வேண்டும் எனவும் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com